RK NAGAR Special - விஷாலுக்கே இந்த நிலமை என்றல் ரஜினி கமல் வந்தால் என்ன ஆகும் ?

454 views · Published 7 December 2017 · 2:47 · Indexed 22 September 2026

Channel: HEADLINES TV · 2017 · News & Politics

Watch on YouTube

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக நடிகர் விஷால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்தார்.

சென்னை ஆர்.கே.நகரில் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் பின்னர் நிராகரிக்கப்பட்டது. மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய வீடியோ ஆதாரம் உள்ளதாகத் தெரிவித்துள்ள விஷால், பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி வெளியில் சென்று வந்ததும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து வீடியோ ஆதாரத்துடன் முறையிட்டார். அப்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், விஷாலின் மனுவை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் தனது புகார் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஆளுநரையும் சந்தித்தும் புகார் அளிக்க உள்ளதாக விஷால் தெரிவித்தார்.

முன்னதாக காலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தை குடியரசுத் தலைவர், பிரதமர் வரை கொண்டு செல்ல இருப்பதாகத் தெரிவித்திருந்தார். நடிகர் கமலஹாசனோ, தி.மு.க.வோ, டி.டி.வி. தினகரனோ தனக்கு பின்னணியில் இல்லை என்று தெரிவித்த அவர், சுயேச்சையாக போட்டியிட முயற்சி செய்த தன்னை அச்சுறுத்தலாக கருதுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

More from this channel