இரவோடு இரவாக மாரியம்மன் கோவில் இடிப்பு - கொந்தளித்த ArjunSampath

1,412 views · Published 29 November 2018 · 3:42 · Indexed 9 October 2026

Channel: Bingoo Box · 2018 · News & Politics

Watch on YouTube

#Arjunsampath #tamilnews #livetamilnews

மலேசிய நாட்டின் கோலாலம்பூர் அருகே நேற்று இரவு சீ-பீல்டு மஹா மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டதற்கும்,
கோவிலை இடிக்க தடுக்க வந்த மலேசிய இந்து தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சென்னை தேனாம்பேட்டை செண்டாப் சாலையில் உள்ள மலேசிய துணை தூதரகத்தில்,
அதிகாரிகளை சந்தித்து
புகார் மனுவை அளித்தார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :
மலேசிய கோலாலம்பூரில் உள்ள பிரசிதிப்பெற்ற மஹா மாரியம்மன் கோவிலை 200 பேர் கொண்ட கும்பல் இரவோடு இரவாக இடித்து சேதப்படுத்தி உள்ளனர்,மேலும் தடுக்க வந்த மலேசிய வாழ் தமிழர்கள் பலரை அடித்து காயப்படுத்தி உள்ளனர், இதனை நாங்கள் கண்டிகின்றோம்.

மலேசியாவை பொருத்த வரை மிகவும் சிறப்பான அரசாங்கமாக இருந்தது,ஆனால் சமீப காலமாக அங்கு தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது.எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.இது குறித்த புகார் மனுவை மலேசிய தூதரக அதிகாரிகளிடம் அளித்துள்ளோம் என்றார்.

More from this channel