ரயில் மறியல் போராட்டம் | Train Blockades | #JusticeForJallikattu | Madurai 360

2,862 views · Published 20 January 2017 · 3:30 · Indexed 2 October 2026

Channel: Madurai 360* · 2017 · People & Blogs

Watch on YouTube

மதுரையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. செல்லூரில் கோவை-நாகர்கோவில் ரயிலை மறித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. செல்லூரில் ரயில் மறியலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செல்லூரில் தண்டவாளத்தில் அமர்ந்த மாணவர்கள் கோவையில் இருந்து நாகர் கோவில் சென்ற ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தண்டவாளத்திலும் ரயிலின் மேற்கூரையிலும் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி மற்றும் பீட்டா அமைப்புக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். மேலும தண்டவாளத்தில் தலையை வைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் தண்டவாளத்திலேயே நிற்பதால் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். இளைஞர்களின் போராட்டம் வலுத்து வருவதால் தமிழக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

For More Updates Subscribe To:
https://www.youtube.com/madurai360

More from this channel